கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் சேனையூர், கட்டைபறிச்சான், கன்னியா, சாம்பல்தீவு, செல்வநாயகபுரம், அன்புவழிபுரம் மற்றும் பெரியகடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 48 குடும்பங்களுக்கு புளொட் பிரித்தானிய கிளை தோழர்களின் நிதியுதவியில் உலருணவுப் பொருட்கள் இன்றைய தினத்தில் (17-07-2021) வழங்கி வைக்கப்பட்டன.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட் )யின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் எல்லாளன், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அசோக், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்களான வசந்தன், ரமேஷ் ஆகியோர் உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்கள்.