கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த சிறுவர்களுக்கு, மல்டிபிள் ஸ்களீரோசிஸ் என்ற மற்றுமொரு நோய் பரவி வருவதாக பொரள்ளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு பொறுப்பான  விசேட வைத்தியர் டொக்டர் நலின் கித்துல்வத்த இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய வகை நோய் தொற்றுக்குள்ளான 34 சிறுவர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இவர்களில், 21 குழந்தைகள் ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர், மேலும் ஐந்து பேர் தற்போது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நோய் தொற்று குறித்து, பெற்றோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என வைத்தியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், காலி – கராபிட்டி மருத்துவமனையில் ஆறு குழந்தைகளும், கண்டி மருத்துவமனையில் நான்கு குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

யாழ்ப்பாணம், தியதலாவ, குருநாகல் மற்றும் பதுளையில் உள்ள மருத்துவமனைகளில் இருந்தும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோய் கொரோனாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், தொற்று ஏற்பட்ட இரண்டு முதல் ஆறு வாரங்களுக்கு இடையில் இது ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறினார்.

இந்த நோய் உலகில் ஒரு புதிய நோய் என்று நலின் கித்துல்வத்த குறிப்பிட்டுள்ளார்.

வயிற்று வலி, தோலழற்சி, வயிற்றுப்போக்கு மற்றும் கண்கள் சிவத்தல் ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். மேலும் இந்த நோய் குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருப்பது முக்கியம், என்றார்.