ஜேர்மனி ludwigsburg இல் வதியும், நாளை (19.07.21) தனது அறுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஜேர்மன் கிளை அமைப்பாளர் தோழர் நல்லதம்பி பவானந் அவர்களும், இன்று (18.07.21) தனது பிறந்த நாளைக் கொண்டாடும் அவரது மகளும் பல்கலைக்கழக மாணவியுமான பவானந்த் பௌர்ணியா ஆகியோரின் நிதியுதவியில்

வறுமைக் கோட்டுக்குட்பட்ட மாணவியின் இணைய சூம் வழி கல்விச் செயற்பாட்டிற்காக இன்று கைத் தொலைபேசி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

யாழ். தொண்டமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் செல்வி. கா.கார்த்திகா என்ற மாணவிக்கு மேற்படி உதவி வழங்கப்பட்டது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பா கஜதீபன், கட்சியின் வலிதெற்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.தர்சன், சமூக சேவையாளர் தயாபரன் ஆகியோர் உதவியை வழங்கி வைத்தார்கள்.