தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆண்டு தோறும் அனுஷ்டித்து வரும் வீரமக்கள் தினத்தின் 32ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கழகத்தின் பிரான்ஸ் கிளையினரால் நேற்று (17-07-2021) சனிக்கிழமை மாலை 3.00 மணியவில் 12, rue de bois, 78390 bois darty, france என்னுமிடத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் பிரான்ஸ் கிளை அமைப்பாளர் தோழர் ரங்கா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது நினைவுச் சுடறேற்றப்பட்டு மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி என்பன இடம்பெற்றன.

இவ்வைபவத்தில் தோழர் உதயகுமார் நினைவுச்சுடரை ஏற்றிவைக்க, இதில் புளொட் பிரான்ஸ் கிளை உறுப்பினர்களான சுகுமார், ஜெயந்தன், சசி(முல்லை), சசி(வவுனியா), தயா(மட்டு), தயா(வவுனியா), உதயன், பிரகாஷ், தீபன், சிவா, கூட்டமைப்பு உறுப்பினர் நந்தன் மற்றும் கழக உறுப்பினர்களின் நண்பர்கள், ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.