ஜேர்மனி ludwigsburg இல் வதியும், இன்று (19.07.21) தனது அறுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஜேர்மன் கிளை அமைப்பாளர் தோழர் நல்லதம்பி பவானந் அவர்களும், நேற்று (18.07.21) தனது பிறந்த நாளைக் கொண்டாடிய அவரது மகளும் பல்கலைக்கழக மாணவியுமான பவானந்த் பௌர்ணியா ஆகியோரின் நிதியுதவியில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற நிலையில் வாழும், மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் ஒருவருக்கு மீன்பிடிக்கான வலைத்தொகுதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனைக் கிராமத்தில் வதியும் மாணிக்கன் உதயகுமார் என்பவருக்கே மேற்படி உதவி வழங்கப்பட்டது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் மாநகரசபை உறுப்பினருமான ம. நிஸ்கானந்தராசா, கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களான ந. இராகவன், கா. கமலநாதன் ஆகியோர் உதவியை வழங்கி வைத்தார்கள்.