இலங்கையில் மேலும் 980 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். இலங்கையின் மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 285,912 பேராக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் 5,172 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அதன்படி  261,848 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.