எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் மீதான வாக்கெடுப்பு இன்று (20) மாலை இடம்பெற்றது.

வாக்கெடுப்பு முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ்மான் உரையாற்றிய போது, இடையில் விமல் வீரவன்ச குறுக்கிட்ட நிலையில் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

எனினும் இதனையடுத்து, இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 61 வாக்குகளும் எதிராக 152 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதனையடுத்து, 91 வாக்குகள் வித்தியாசத்தில் கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.

இதனையடுத்து, ஓகஸ்ட் 03ஆம் திகதி காலை 10 மணிவரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.