மாலைத்தீவின் ஜனாதிபதி இப்ராஹீம் மொஹமட் சொல்ஹி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இன்று (20) காலை 11.30 மணியளவில் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 102 என்ற விமானத்தின் ஊடாக அவர் இலங்கையை வந்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருடன் 15 அதிகாரிகளுடன் கூடிய குழு ஒன்று வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் அவர்கள் நாட்டில் தங்கியிருக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.