இலங்கையில் மேலும் 1,062 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதனடிப்படையில், மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 287,481 பேராக அதிகரித்துள்ளது.

மேலும் 980 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 262,828 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 19,764 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.