32 வது வீரமக்கள் தினம் பிற்பகல் 3மணியளவில் சுவிஸ் கிளையின் நிர்வாகப்பொறுப்பாளர் வரதனின் தலைமையில் ஆரம்பமானது.

முதலில் வீரமக்களுக்கு மெளன அஞ்சலியும் அதனை தொடர்ந்து நினைவுச்சுடரினை சுவிஸ் கிளை பொறுப்பாளர் ஆனந்தனுடன் ஜேர்மன் கிளை தோழர்கள் அப்பன், யூட், அவர்களும் மற்றும் தோழர் குமார் நடன ஆசிரியை குகறாஜசர்மா ஜெயவாணியும் ஏற்றி வைக்க அதனை தொடர்ந்து தோழர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் அனைவரும் இணைந்து மலரஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து தோழர் தீபன் அவர்களின் உரையும் தொடர்ந்து சூரிச் கலாச்சாரமன்ற பொறுப்பாளரும் சூரிச் சிவ சுப்ரமணிய ஆலயத்தின் அரங்காவலருமான தோழர் இரட்ணகுமார் அவர்களின் உரையும் தொடர்ந்து தோழர் சிவா அவர்களின் உரையும் அதனைத் தொடர்ந்து அக்கடமி ஒப் ஆட் நடனாலய மாணவிகளின் நடன நிகழ்வுகளும் நடன ஆசிரியை திருமதி ஜெயவாணி அவர்களின் நெறியாக்கத்திலும் தொகுத்து வழங்கலிலும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஒலி வடிவில் புளொட் தலைவர் தோழர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் உரையும் பிரித்தானிய கிளை பொறுப்பாளர் தோழர் பாலா அவர்களின் உரையும் ஜேர்மன் கிளை பொறுப்பாளர் தோழர் பவானந்தன் அவர்களின் உரையும் அதனைத் தொடர்ந்து சுவிஸ் இடது சாரிக்கட்சியான சோசலிசக்கட்சியின் அட்லிஸ்வீல் நகரசபை உறுப்பினரும் வெளிநாட்டு மக்களுக்கான இணைத்தலைவருமான திரு கண்ணதாசனின் உரையும் சூரிச் சைமன்ஸ் அகடமியின் நிறுவனரான திரு கணபதிப்பிள்ளை ஆசிரியர் அவர்களின் உரையும்,

அதனை தொடர்ந்து யோகா பயிற்சி மாணவிகளின் நடன செய்முறை காட்சியுடன் நடன ஆசிரியையின் யோகா பற்றிய விளக்க உரையும் தொடர்ந்து பங்கு பற்றிய மாணவிகளை கெளரவித்து சிறப்பு பரிசில்கள் வழங்கியதுடன் அவர்களை நெறிப்படுத்தி தொடர்ச்சியாக எமது நிகழ்வுகளுக்கு கலை நிகழ்ச்சிகளை வழங்கி வரும் திருமதி ஜெயவாணி அவர்களை திருமதி புனிதமலர் திருமதி கலைவதனி ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.

மேலும் இவ் நிகழ்வுகளின் ஒலி ஒளி பதிவுகளை தோழர் ஞானம் அவர்கள் செய்து உதவினார். மேலும் தோழர் பெரியதம்பி ஜெகநாதன் அவர்கள் நிழல் படம் எடுத்து உதவி புரிந்தார். அத்துடன் மண்டப அலங்காரத்தினை சுஜி பலஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு நவம் அவர்கள் செய்து உதவினார்.

இறுதியாக சுவிஸ் கிளை நிர்வாக பொறுப்பாளர் தோழர் வரதனின் நன்றி உரையுடன் 32 வது வீரமக்கள் தின நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தது.

மேலும் எமது வீரமக்கள் தினம் இக்கட்டான சூழ்நிலையிலும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய சுவிஸ் நாட்டு சட்டப்படி மட்டுப்படுத்தப்பட்ட கணிசமான மக்களுடன் இனிதே நிறைவு பெ ற்றது.

நன்றி,

சுவிஸ் கிளை
ஆனந்தன்.

சுவிஸ் வீரமக்கள்தின வாழ்த்து செய்தி,

கழக செயல்பாட்டார்களே, ஆதரவாளர்களே, அனுதாபிகளே உங்கள் அனைவர்களுக்கும் ஜெர்மன் கிளையின் தோழமையுள்ள வணக்கங்கள்,

நீங்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்த போதும் , எப்பொழுதும் எமது இனத்திற்கு கரம் கொடுப்பதில் தவறியது இல்லை . அத்துடன் வருடம் தோறும் வீர மக்கள் தினம் நடாத்துவதில் சிரமம் பாராது சிறப்போடு செயல்பட்டு வந்துள்ளீர்கள்.

பல அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் வந்த போதும், அவைகளை எதிர்கொண்டு எமது இனத்திக்காக போராடி இன்னுயிரை தந்த எமது போராளிகளுக்கு தொடர்ச்சியாக அஞ்சலி செலுத்தி வந்துள்ளீர்கள்.

இதன் மூலம் எமது போராட்ட வீரர்களின் தியாக செயல்களை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்து இயம்புவதில் உங்கள்பணி திறம்பட செயல்பட்டுள்ளது.

வீரமக்கள் தினம் ஆரம்பமான ஆண்டு முதல் இன்றுவரை தொடர்ச்சியாக உங்கள் கிளையும், செயல்பாட்டாளர்களும் வீரமக்கள் தினத்தினை நடத்துவதில் ஏனைய கிளைகளுககு ஒரு எடுத்துக்காட்டாக செயல்பட்டு வந்துள்ளீர்கள்.

எமது தேசம் பற்றிய சிந்தனை வரும்போதெல்லாம் எமது இனத்தின் உரிமைக்காக போராடி உயிர்நீத்த தோழர்களும் எமது நினைவில் நிலை கொள்வார்கள் என்று உறுதி கொள்வோம் . எமது தாயகம் என்பது ஒரு வெறும் வரைபடம் அல்ல, அது நம் ஒவ்வொருவரின் இதயம் என்போம். எமக்காக மடிந்த தோழர்கள் எமது உயிர் மூச்சு என்போம். அவர்களது இலட்சியம் வெல்லும் வரையில் நாம் அலட்சியம் கொள்ளோம்.

உங்கள் வீரமக்கள் தினம் திறம்பட இடம்பெற வாழ்த்துகிறோம்.

இவ்வண்ணம்.

ஜெர்மன் கிளை பொறுப்பாளர்.
ந. பவானந்தன்
16.07.2021.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி.(DPLF)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்.(PLOTE)