சுகாதார சேவைகள், துறைமுகங்கள், பெற்​றோலியம், சுங்கம் உட்பட 12 துறைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றுவதை விரிவுபடுத்தும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜெயசுந்தர வெளியிட்டுள்ளார்.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின்படி ஜனாதிபதியின் செயலாளரால் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது..

இலங்கை ரயில்வே திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை உட்பட பொது போக்குவரத்து சேவைகள், அனைத்து மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம சேவகர்கள், விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள், இலங்கை மத்திய வங்கி உட்பட அனைத்து அரச வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவைகள், உள்ளூராட்சி மன்றங்களின் முகாமைத்துவ சேவைகள், லங்கா சதோசா லிமிடெட், கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனம், உணவு ஆணையாளர் திணைக்களம், மாகாண சபைகளின் கீழ் உள்ள அனைத்து அரச அலுவலகங்களின் சேவைகள், தபால் திணைக்களத்தின் சேவைகள் ஆகியவையே இவ்வாறு அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.