முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைச்செய்தபோது, எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்த தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியின் மரணம் தொடர்பிலான  விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை கவனிப்பதற்கு சட்டமா அதிபர் சஞ்ஜய ராஜரட்ணம் குழுவொன்றை நியமித்துள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணிப்புரிந்த நிலையில், உயிரிழந்த டயகம சிறுமிக்கு நீதி கோரி, இன்று (22) கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன், சிறுவர் மற்றும், பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரையோகத்தைக் கண்டித்தும், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன.