கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேசத்தில் 10 பயனாளிகள், வடமராட்சி பிரதேசத்தில் 15 பயனாளிகள், கோப்பாய் பிரதேசத்தில் 15 பயனாளிகள் என மொத்தம் 40 பயனாளிகளுக்கு புளொட் சுவிஸ் கிளைத் தோழர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களின் நிதியுதவியில் உலருணவுப் பொருட்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட் )யின் யாழ். மாவட்ட அமைப்பாளர் பா.கஜதீபன், முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர், சமூக சேவையாளர்கள் தயாபரன், கோபி மற்றும் தோழர்கள் சொக்கன், சாந்தன் ஆகியோர் உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்கள்.