இலங்கையில் மேலும் 1,220 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் பாதிக்கப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 294,333 பேராக அதிகரித்துள்ளது.

அத்துடன், இன்றைய தினத்தில் மேலும் 957 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 266,665 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 23,709 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.