தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழக கண்மணிகள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில்  இணைய சூம் வழியிலான அஞ்சலிக் கூட்டம்  இலங்கை நேரப்படி இன்று மாலை 06.00 மணிமுதல் 9.00 மணிவரையில் இடம்பெற்றது.

நிகழ்வினை தோழர்கள் குணபாலன், கோபி மோகன் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

இதன்போது தலைமையுரையினை புளொட்டின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் அவர்கள் ஆற்றினார்.

இதனைத் தொடர்ந்து தமழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் வடக்கு கிழக்கு முதலமைச்சர்  வரதராஜபெருமாள், மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் ஸ்தாபகர்களில் ஒருவரும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் உபதலைவரும், அரசியல் ஆய்வாளருமான காதர் மாஸ்டர், ரெலொ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், சமூக அரசியல் செயற்பாட்டாளர் திருமதி ஞானசக்தி ஸ்ரீதரன் ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து அரசியல் ஆய்வாளர் ஜதீந்திரா  அவர்கள் உரையாற்றினார்.

தொடர்ந்து தமிழகத்தில் இருந்து சர்வதேச மன்னிப்பு சபையின் செயற்பாட்டாளர் கரூர் கண்ணதாசன் அவர்கள் உரையாற்றினார்.

இதனையடுத்து புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் உரை இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து கழகத்தின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர்    எல்லாளன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.