அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள், தங்களது தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டு ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகளைத் தொடருமாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மணவர்கள், கல்வியைத் தொடர முடியாமல் சிரமப்படுகின்றனர் என்றும், கொரோனா தொற்றுநோயுடன் நாடு போராடும் இந்த முக்கியமான கட்டத்தில் தங்கள் ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் எழுப்பியுள்ள பிரச்சினைகள் கடந்த 24 ஆண்டுகளாக தொடர்கின்றன என்றும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கைகளில் இதுதொடர்பானமிகப்பெரிய பொறுப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பான ஒரு விரிவான அறிக்கையை கல்வி அமைச்சர் விரைவில் வெளியிடுவார் என்று குறிப்பிட்ட அவர், அவர்களின் கோரிக்கைகள் தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஏற்கனவே கலந்துரையாலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சின் செயலாளராக, என்னிடம் எதுவும் இல்லை, ஆனால் உங்கள் ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கச் சொல்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர், சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுக்கு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட செவ்வாய்க்கிழமை (27) வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.