சிறுவர்களை பணியாளர்களாக வேலைக்கமர்த்துவதைத் தடுக்க சில அவசர சட்டமூலங்களை  பாராளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இது தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பிரதானிகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வேலை வழங்குவதைத் தடுப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும், சிறுவர்களுக்காக தனி நீதிமன்றங்களை நிறுவுவதற்கும், துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்ட சிறுவர்களின் சாட்சியங்களை வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் பெறுவதற்கும் புதிய சட்டங்களைக் கொண்டுவருவதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மாகாணத்திலும் சிறுவர்களுக்காக தனி நீதிமன்றம் அமைப்பதற்கான முன்மொழிவு நீதிச் சேவை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.