தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பிரித்தானியாக் கிளையின் 32வது வீரமக்கள் தின அஞ்சலி நிகழ்வு பிரித்தானியாக் கிளையின் பொறுப்பாளர் தோழர் பாலா அவர்களின் தலைமையில் தோழர் அல்வின் அவர்களின் மேற்பார்வையின்கீழ் 25/07/2021 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியில் இருந்து மாலை 5மணிவரை 312 EAST COTE LANE HARROW HA2 9AH என்ற மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வை தோழர் முகுந்தன் அவர்கள் நெறிப்படுத்தினார். பிரதம உரையை தோழர் கிருஷ்ணன் அவர்கள் ஆற்றியதோடு, அவரால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு ஓரு நிமிட மெளன அஞ்சலியுடன் மலர்
அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிறப்பு உரைகளாக zoom இணையத்தின் ஊடாக கழகத்தின் தலைவர் தோழர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கழகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பாளர் தோழர் செ.ஜெகநாதன், கழகத்தின் உப தலைவர்களில் ஒருவரான தோழர் ஜி.ரி.லிங்கநாதன், கழகத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளர் பா.கஜதீபன், கழகத்தின் கனடா கிளை அமைப்பாளர் தோழர் குணபாலன் , கழகத்தின் அமெரிக்க கிளை அமைப்பாளர் தோழர் கோபி, தமிழகத்தில் இருந்து சர்வதேச மன்னிப்பு சபையின் செயற்பாட்டாளர் கரூர் கண்ணதாசன், கரம் போல் (பிரித்தானியா பழைமைவாத கட்சி உறுப்பினர்BTC) ஆகியோர் வீடியோ பதிவின் மூலமும், DR லயனல் போபகே (முன்னாள் JVP உறுப்பினர்), தோழர் திவான் (EPRLF), தோழர் சாம் (TELO), DR .சுரேஷ் , திரு நகிரதன் (பித்தானியா தொழில் கட்சி உறுப்பினர்) ஆகியோர் நேரில் கலந்து கொண்டும் உரையாற்றினார்கள்.

மற்றும் தோழர் நேதாஜி, தோழர் தயா மயூரன் ஆகியோர் கவிதை வழங்கியதைச் தொடர்ந்து தோழர் சுகந்தன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது,

நிகழ்வில் கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள், ஏனைய இயக்கத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.