தொண்ணூற்று ஐந்து வீதமான எண்ணிக்கையில் தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக, தமிழ் மொழியில் பரிச்சயம் அற்ற ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில், கரைச்சி பிரதேசசபை  மண்டபத்திவ் இன்று மாலை கலந்துரையாடல்  ஒன்று இடம்பெற்றது.

தமிழரசுக் கட்சித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், எஸ்.சிறிதரன், வினோ நோகராதலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர். சிவமோகன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட உள்ளூராட்சிச் சபைகளின் தவிசாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வடமாகாண பிரதம செயலாளராக தமிழ் மொழி தெரியாத ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்தும், தமிழ் மொழி தெரிந்த ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் கடிதங்கள் அனுப்புவது என கலந்துரையாடலின் முடிவில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.