ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழக முன்றலில் இன்று (28) காலை 11 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக முன்றலில் காலை 11 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று (28) இணையவழிக் கற்பித்தலில் இருந்து விலக முடிவு செய்வதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அதற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.