குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, 5 மணிநேர விசாரணைக்குப் பின்னர், திணைக்களத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது வெளியிட்ட கருத்து தொடர்பில் மேலதிக வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் அழைப்பின்படி இன்று காலை 10 மணிக்கு ஆஜராகியிருந்த  ஹரின் எம்.பி, விசாரணைகளின் பின்னர், பிற்பகல் 3.15க்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தை விட்டு வெளியேறியுள்ளார்.