சிறுவர்களை பணிக்கு அமர்த்துதல், துன்புறுத்தலுக்கு ஆளாக்குதல், துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான தகவல்களை 0112 433 333 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறு அவர்  கேட்டுக்கொண்டார்.

அதேநேரம், சிறுவர்களை பணிகளுக்கு அமர்த்தியுள்ள இடங்களை கண்டறிவதற்கான சுற்றிவளைப்புக்கள் மேலும் சில பொலிஸ் பிரிவுகளில் இன்றைய தினமும் முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கொழும்பு நகரில் சிறுவர்களை பணிக்கு அமர்த்தியுள்ள இடங்களை கண்டறிவதற்காக  30 இடங்களில் நேற்று (27) சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

புலனாய்வு பிரிவின் தகவல்களுக்கு அமைய முகத்துவாரம் மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுகளில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.