யாழ்ப்பாணத்தில் இளைஞர்களைத் தாக்கி,சித்திரவதை புரிந்தது மட்டுமன்றி அவர்களை கேளி, கிண்டல் செய்த குற்றச்சாட்டின் கீழ், நான்கு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவாந்துறை பகுதியில் புறா வளர்த்த இரண்டு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட தர்க்கம் மோதலாக மாறியது.இந்நிலையில் தாக்குதலை நடத்திய இளைஞர்கள்,தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்களிடம் சமரசம் பேச முற்பட்ட போது,பெண்கள் குழுவொன்று சமரசம் பேச வந்த இளைஞர்கள் நான்கு பேரை தாக்கி , அவர்களின் முகங்களில் மிளகாய் தடவி சித்திரவதை புரிந்து அதனை காணொளியாக பதிவேற்றி,அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

பெண்களின் சித்திரவதைக்கு உள்ளான இளைஞர்களில் ஒருவர் கடந்த 27ஆம் திகதி தவறான முடிவெடுத்து தன்னுயிரை மாய்த்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த இளைஞர்களைத் தாக்கி,சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.