மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் விசேட திட்டங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்துவதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

பயணத்தின் போது தடுப்பூசி செலுத்தப்பட்ட அட்டையைக் காண்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என  தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியின் முதல் டோஸை கூட பெறாத பயணிகளிடம் சாதாரண பஸ் கட்டணத்தை விட இரண்டு மடங்கு கட்டணம் அறவிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் நாளை  (01) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.