நாட்டில் மேலும் 56 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று முன்தினம் (29) உறுதிப்படுத்தப்பட்டவையென அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 38 ஆண்களும் 18 பெண்களும் அடங்குகின்றனர். இவர்களில் 41 பேர் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களாவர்.

இதன்பிரகாரம், இலங்கையில் இதுவரை 4,380 COVID மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, நாட்டில் நேற்று 2,455 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் முதல் மீண்டும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நேற்று (30) உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கையுடன் இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3,06,662 ஆக அதிகரித்துள்ளது. 2,75,212 நோயாளர்கள் இதுவரை குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளாகிய 27,126 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, நாட்டில் டெல்டா பிறழ்வு கொரோனா தொற்று பல பகுதிகளிலும் அடையாளங் காணப்பட்டுள்ளது.

கொழும்பு, மாத்தறை, காலி, களுத்துறை, கம்பஹா, மாத்தளை, வவுனியா, திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெல்டா பிறழ்வு தொற்றுக்குள்ளானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்