இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் 2,404 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தொற்றுறுதியானதாக குடும்ப நல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 14 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்ததாகவும் குடும்ப நல சுகாதார பணிப்பாளர் சித்ரமாலி டி சில்வா இன்று (31) தெரிவித்தார்.
மேலும், குறித்த 14 கர்ப்பிணிகளும், மூன்றாம் கொவிட் 19 அலையினாலேயே மரணித்தனர்.
உயிரிழந்தவர்களில் பலருக்கு அதி உயர் குருதி அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் காணப்பட்டது.
மேலும், 35 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணித்தாய்மார்களே கொவிட்19 நோயினால் உயிரிழந்ததாகவும் குடும்ப நல சுகாதார பணியகத்தின் சித்ரமாலி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்