கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 2021 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more
தான் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக` ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆண்டு தோறும் அனுஷ்டித்து வரும் வீரமக்கள் தினத்தின் 32ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கழகத்தின் பிரான்ஸ் கிளையினரால் நேற்று (17-07-2021) சனிக்கிழமை மாலை 3.00 மணியவில் 12, rue de bois, 78390 bois darty, france என்னுமிடத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் பிரான்ஸ் கிளை அமைப்பாளர் தோழர் ரங்கா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ஜேர்மனி ludwigsburg இல் வதியும், நாளை (19.07.21) தனது அறுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஜேர்மன் கிளை அமைப்பாளர் தோழர் நல்லதம்பி பவானந் அவர்களும், இன்று (18.07.21) தனது பிறந்த நாளைக் கொண்டாடும் அவரது மகளும் பல்கலைக்கழக மாணவியுமான பவானந்த் பௌர்ணியா ஆகியோரின் நிதியுதவியில்
கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் சேனையூர், கட்டைபறிச்சான், கன்னியா, சாம்பல்தீவு, செல்வநாயகபுரம், அன்புவழிபுரம் மற்றும் பெரியகடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 48 குடும்பங்களுக்கு புளொட் பிரித்தானிய கிளை தோழர்களின் நிதியுதவியில் உலருணவுப் பொருட்கள் இன்றைய தினத்தில் (17-07-2021) வழங்கி வைக்கப்பட்டன.
புளொட்டின் 32ஆவது வீரமக்கள் தினம் நேற்று யாழ் வடமராட்சி ராஜகிராமம் சனசமூக நிலையத்தில் தோழர் சொக்கன் அவர்களின் தலைமையில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக இடம்பெற்றது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 17 ஆண்களும் 14 பெண்களுமே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 3,733 பேர் உயிரிழந்துள்ளனர்
கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த சிறுவர்களுக்கு, மல்டிபிள் ஸ்களீரோசிஸ் என்ற மற்றுமொரு நோய் பரவி வருவதாக பொரள்ளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு பொறுப்பான விசேட வைத்தியர் டொக்டர் நலின் கித்துல்வத்த இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று (16.07.2021) வெள்ளிக்கிழமை மாலை 4.00அளவில் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள அமரர் உமாமகேஸ்வரன் இல்லத்தில் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்)அவர்களின் தலைமையில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக நடைபெற்றது.