கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 36 ஆண்களும் 31 பெண்களுமே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  4,508 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,792 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி,  278,910 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 25,488 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.