அரச நிறுவனங்களின் கடமைகள் இன்று முதல் சாதாரணமாக ஆரம்பிக்கப்படுவதால் இலங்கை ரயில்வே திணைக்களம் 104 ரயில் சேவைகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
மாகாணங்களுக்கிடையில் 15 ரயில் சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், பண்டங்கள் மற்றும் பொதிகள் சேவை, தபால் ரயில் மற்றும் நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.