அனைத்து அரச ஊழியர்களையும் நேற்று (02) முதல் சேவைக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் நோக்கில், அதிகளவான ரயில்கள் மற்றும் பஸ்களைச் சேவையில் ஈடுபடுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

அத்துடன், சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டதாக போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

அத்துடன், அலுவலக நேரங்களில் பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமை போல் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)