கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக கொஹுவளை தனியார்  வங்கி மூடப்பட்டுள்ளது.  அத்துடன் நுகேகொடை, கிருலப்பனை,  கொஹுவளை ஆகிய பகுதிகளிலுள்ள பல்பொருள் அங்காடியில் முறையே  40,26,18 ஊழியர்கள் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில்  பல்வேறு பகுதிகளிலுள்ள  பல்பொருள் அங்காடிகளின் ஊழியர்கள் பலர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வாடிக்கையாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறு விற்பனை நிலையங்கள் தெரிவித்துள்ளன.