நாட்டில் கடந்த 25ஆம் திகதி முதலான 10 நாட்களில் 21,344 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி  குறித்த காலப்பகுதியில் 591 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறினார்.

கொரோனா  நிலவரம் தொடர்பில் பாராளுமன்றில் தகவல் வெளியிடுகையில் அவர் இதனை இன்று (05) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 10 நாட்களில் ஒரு இலட்சத்து 34 ஆயிரத்து 179 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10 நாட்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கையை 140 – 150க்கும் முகாமைத்துவம் செய்ய முடிந்துள்ளாதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை,  நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய 14 சிறுவர்கள் உயிரிழந்ததாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.