இலங்கையில் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 177 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் ஊடாக குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.