இலங்கையில் டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் மக்கள் பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
தொற்றுக்குள்ளானோரில் 1.5 சதவீதமானோர் மரணிக்கின்றனர். அநேகமானோர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த அச்சுறுத்தலுக்கு இரையாகாமல் இருக்க வேண்டின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகளை சரியாக பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் கடுமையாக அறிவுறுத்தியுள்ளனர்.
அனைத்துக்கும் முதலில் மிக விரைவாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளவும்.உலகில் அநேகமானோரின் உயிர் காப்பாற்றப்பட்டிருப்பது கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டமையினாலேயேயாகும்.
அத்தியாவசிய தேவைக்கேயன்றி வீட்டிலிருந்து வெளியில் செல்ல வேண்டாம்.
மக்கள் ஒன்று கூடுகின்ற திருமண வைபவங்கள், மரண வீடுகள் மற்றும் இதர உற்சவங்களில் பங்குபற்றுவதை முழுமையாக தவிர்த்துக் கொள்ளவும்.
பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள்.
அறைகள், மண்டபங்கள், மின்தூக்கி, வாகனங்கள் போன்ற மூடப்பட்ட இடங்களில்
சனங்களுடன் ஒன்று சேர வேண்டாம்.
அடிக்கடி சவர்க்காரமிட்டு இரு கைகளையும் கழுவிக் கொள்ளவும்.
மற்றவர்களுடன் இரு மீற்றர் சமூக இடைவெளியினை பேணவும்.
நாட்பட்ட நோய்கள் இருப்பின் தொழிலுக்காகவன்றி வீணாக வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம்.
உங்களது மற்றும் உங்களது அன்புக்குரியவர்களின் உயிரைக் காப்பாற்றுவதை பிறருக்கு வழங்காது, உங்களுடைய பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றி உங்களையும், குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளவும்.
என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.