கனடாவில் மரணித்த யாழ் உரும்பிராயைச் சேர்ந்த தோழர் ராசா (முருகேசு சத்தியநாதன்) அவர்களின் 45ம் நாள் நினைவை முன்னிட்டு 50,000 ரூபாய் நிதியில் உரும்பிராய் பகுதியில் கொரோனா பாதிப்பு காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி குடும்பங்களுக்கும் , மேலும் 50,000 ரூபாய் நிதியில் கொரோனாவால் யாழ் தீவகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒரு தொகுதி குடும்பங்களுக்கும் கழகத்தின் கனடா கிளையின் நிதியிலிருந்து நேற்று உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

உரும்பிராயில் நேற்று நடைபெற்ற தோழர் ராசா (முருகேசு சத்தியநாதன்) அவர்களின் 45ஆம் நாள் நினைவு நிகழ்வின்போது அவருடைய நெருங்கிய உறவினரும் நண்பருமான திரு. பொன்னுத்துரை கருணாகரன் அவர்கள் நினைவுச் சுடரேற்றினார்.  மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி இடம்பெற்றதைத் தொடர்ந்து ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட் )யின் யாழ். மாவட்ட அமைப்பாளர் பா.கஜதீபன் அவர்கள் நினைவுரையாற்றினார்.

அஞ்சலி நிகழ்வில், கட்சியின் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் அகீபன், கட்சியின் முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் மற்றும் தோழர் ராசா அவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.