கொரோனா தொற்றாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுக்காக 24 மணித்தியாலங்களும் இயங்கக்கூடிய, இரண்டு தொலைப்பேசி இலங்கங்கள் அறிமுகப்படுதப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தள்ளது.
1999 அல்லது 011 7 966 366 என்பதே அந்த தொலை பேசி இலக்கங்களாகும். இந்த தொலை பேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தேவையான நிவாரண உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இதனூடாக கொவிட் நோயாளி, வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ், 14 நாட்களுக்கு வீட்டிலிருந்தவாறே சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியும். தொற்றாளரின் நிலைமை மோசமடையுமானால் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)