கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால், முள்ளியவளை, முறிப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளிட்ட 50 குடும்பங்களுக்கு புளொட் பிரித்தானிய கிளை தோழர்களின் நிதியுதவியில் உலருணவுப் பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின்  பொருளாளர் க.சிவநேசன்(பவன்), கட்சியின் தேசிய அமைப்பாளர் தவராஜா மாஸ்டர், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் விக்னேஸ்வரன்,  கட்சியின் மாவட்ட செயலாளர் யூட், கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கவாஸ்கர் ஆகியோர் உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்கள்.