கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ். மானிப்பாய் தொகுதிக்குட்பட்ட பிரதேசத்தில் 20 பயனாளிகளுக்கும், யாழ். நாச்சிமார்கோவிலடியில் அமைந்துள்ள செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தில் 10 பயனாளிகளுக்கும் புளொட் சுவிஸ் கிளைத் தோழர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களின் நிதியுதவியில் உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட் )யின் யாழ். மாவட்ட அமைப்பாளர் பா.கஜதீபன், கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் தர்சானந்த், கட்சியின் முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர், மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் செல்வி ஆகியோர் உதவியினை வழங்கி வைத்தார்கள்.