நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக ஓய்வூதியத் திணைக்களத்துக்கு நாளை (10) முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை வருகைதர வேண்டாம் என அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

ஓய்வூதிய பிரச்சினைகள் தொடர்பில் ஓய்வூதியத் திணைக்களத்துக்கு வருகைதரும் ஓய்வூதியம் பெறுவோருக்கே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதுதொடர்பில்  அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓய்வூதியத் திணைக்களத்தினால் பெற்றுக் கொள்ளக்கூடிய சேவைகளுக்காக 1970 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.