கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கிகரிக்கப்பட்ட பயணிகள் மட்டுமே ரயிலில் அனுமதிக்கப்படுவார்கள் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ அடையாள அட்டை அல்லது உரிய ஆவணங்கள் இல்லாத நபர்கள், மாகாணங்களுக்கு இடையேயான ரயில் சேவைகளைப் பயன்படுத்த முடியாது என்று குறிப்பிட்டார்.

ரயில்வே ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர், ஆவணங்களை எந்த நேரத்திலும் சரிபார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.