கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கிராஞ்சி, குமிழமுனை, நாச்சிக்குடா, நாகபடுவன், பரந்தன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 40 குடும்பங்களுக்கு புளொட் பிரித்தானிய கிளை தோழர்களின் நிதியுதவியில் நேற்று (10.08.2021) உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் க மகேந்திரன் (ராஜா), தோழர்கள் ரமேஷ் (ராஜா), ஜெயந்தன், அமுதன், மதி மற்றும் பிரதேச கட்சி செயற்பாட்டாளர் சுதர்சன் ஆகியோர் உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்கள்.