கடந்த சனிக்கிழமை (07.july.2021) கனடாவின் Scarborough நகரில் இந்த நினைவு அஞ்சலி கூட்டம் இடம்பெற்றது. இதில் தோழர் ராசாவின் நண்பர்கள், தோழர்கள், உறவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

கூட்டத்தின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நேசன் கூட்டத்தினை ஆரம்பித்து வைத்து, தோழர் ராசாவுடன் பழகியவர்கள், தெரிந்தவர்கள் அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொள்ளலாம் என கேட்டிருந்தார்.

இதற்கு அமைய பலர் அவரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்தனர்.

பயிற்சி முடித்து வரும் தோழர்களை பாதுகாத்து வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைப்பதில் ராசா எவ்வாறு பொறுப்புடனும் ,பாதுகாப்பாகவும் செயல்பட்டு இருந்தார் என்பதனை தோழர் ஜோர்ச் அவர்கள் தனது உரையில் தெரிவித்து இருந்தார்.

உரும்பிராயினை சேர்ந்த தோழர் ஜெயந்தி அவர்கள் தனது உரையில் தெரிவிக்கையில், ஆரம்பகாலங்களில் அவர் தமிழ் இனத்தின் மீதும், கட்சியின் மீதும் எவ்வாறு அக்கறை இருந்ததோ, அது இறுதிவரையில் அவருடன் இருந்தது என்று தெரிவித்து இருந்தார்.

மேலும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் கனடா கிளையின் பொறுப்பாளர் க. கந்தசாமி , இணைப்பாளர் செ.குணபாலன் ஆகியோரும் உரை நிகழ்த்தி இருந்தனர்.

இந்த அஞ்சலி நிகழ்வானது தோழர் செல்வம் அவர்களின் நன்றி உரையுடன் நிறைவடைந்தது.