மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டிய மற்றும் வெரஹேர அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அவ்விரு அலுவலகங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.

இதனையடுத்தே, அவ்விரு அலுவலகங்களும் எதிர்வரும் 16ஆம் திகதி வரையிலும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.