கல்கிசை பிரதேசத்தில் 15 வயதான சிறுமியை பாலியல் தேவைகளுக்கு விற்பனை செய்வதற்காக விளம்பரப்படுத்திய 4 இணையத்தளங்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், கொழும்பு நீதவான் நீதிமன்றம், தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இணையத்தளங்களுக்கு தடைவிதிக்குமாறு, சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இது போன்ற இணையத்தளங்களுக்கு தகவல்களை பதிவேற்றுதல் உள்ளிட்ட விடயங்கள் குற்றச்செயலாகும் என, பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.