உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறையாக விசாரணைகளை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓகஸ்ட் 21ஆம் திகதி கறுப்பு கொடி தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இதற்கான அறிவிப்பை கொழும்பு ​​பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்தார். அத்துடன்,   ஜூலை 13 ஆம் திகதியன்று ஜனாதிபதிக்கு தான் எழுதிய கடிதத்துக்கும்  சரியாக பதிலளிக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.