பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கு அவசர கூட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை (16) சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.

தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று நிலைமையில் முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் அதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.