கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸை வழங்குவதன் மூலம் கொரோனா பரவுவதை நிறுத்தவோ அல்லது குறைக்கவோ முடியும் என்றும் பிறழ்வை இது தடுப்பதுடன், பிறழ்வு மாறுபாடு தடுக்கப்படும் என்றும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.

தடுப்பூசியின் மூன்றாவது டோஸை பூஸ்டராகப் பயன்படுத்துவது அவசியம் என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பூஸ்டர் வழங்கப்பட வேண்டும் எனின், ஒரு காலவரிசையை அடையாளம் காணும் வகையில் ஒரு செயற்றிட்டம் அமைக்கப்பட வேண்டும் என்றும் ஆரம்ப வகையினங்களை ஒரு முறையின் மூலம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மக்கள்தொகைக்குள் ஒரு வைரஸ் தீவிரமாக பரவி, அதிக எண்ணிக்கையிலான நபர்கள் தொற்றுக்குள்ளாகும் போது, வைரஸ் பிறழ்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது என்றும் மூன்றாவது டோஸ் வழங்குவதற்கு குறைந்தபட்சம் 15 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் தேவை என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

12 தொடக்கம் 18 வயதினருக்கான தடுப்பூசியை வழங்குவதற்கு இந்த நேரத்தில் தீவிரமாக ஆராயப்பட வேண்டும் என்றும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.