ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எம்.பியுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், இன்று (17) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் சுமார் 40 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்ததாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் தெரிவித்துள்ளன.

நாட்டின் தற்போதைய கொரோனா ​நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இருவரும் சந்திக்கவுள்ளதாக முன்னதாக தகவல் வெளியாகியிருந்தது.