நாட்டை முடக்குமாறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதார பணி உதவியாளர்கள் ஆகியோரால், வவுனியா வைத்தியசாலை வளாகத்தில், இன்று (18) நண்பகல் 12 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், வைத்தியசாலையில் போதுமான அளவு ஒட்சிசனை களஞ்சியப்படுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஒரு வாரத்துக்கு நாட்டை முழுமையாக முடக்கு, சுகாதார துறை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து போன்ற வாசகங்கள் தாங்கிய பாதாதைகளை ஏந்தியிருந்தனர்.