மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் விதமாக எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் நடைமுறைப்பட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார நடைமுறைகள் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் விற்பனை நிலையங்களை திறந்து வைக்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஒரே தடவையில் 25% வாடிக்கையாளர்களை மாத்திரமே உள்வாங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.